மாற்றங்கள் ஒன்றே மாறாதது

ஊக்கம் கொடுப்பவன்

ஊக்கம் கொடுப்பவன்
எனது வலைத்தளத்திற்கு வந்தமைக்கு நன்றி

Followers

எனது வலைத்தளங்களை கீழே கொடுத்துள்ளேன் அதைப் பார்க்க கிளிக் செய்யவும்

Friday, November 7, 2014

:மன இறுக்கம் போயே போச்சு



புத்தகத்தின் பெயர்:மன இறுக்கம் போயே போச்சு
எழுதியவர்:கார்த்தீபன்
பதிப்பகம்:வானவில் புத்தகாலயம்
முதல் பதிப்பு:டிசம்பர் 2007
விலை:70 ரூபாய்

                மன இறுக்கத்தை பற்றிய நூல் என்றாலே யோகாசனம்,தியானம் முக்கால் பங்கு இடம் பெற்று விடும் நிலையில் இந்த நூல் சற்று வித்தியாசமானது .எடுத்தவுடன் நெருப்பில் வெந்து சாவதை விட மன நெருக்கடியில் வெந்து சாவது கொடியது என ஆரம்பிக்கின்றது .


முடிவு எடுக்க முடியாமல் இருக்கும் நிலையை டென்ஷன் என கூறுகிறார் ஆசிரியர்.பின்பு இரண்டு இரண்டு என்ற தலைப்பில் வாழ்க்கையில் உள்ள இன்ப துன்பங்களைப் பற்றி கூறுகின்றார்.
           நான்(EGO STATE ) என்ற நிலையை பற்றி கூறுகிறார்.டென்ஷனின் வகைகளைக் கூறுகின்றார்.விலங்குகளுக்கும் டென்ஷன் உண்டு அது உணவை மட்டும் சார்ந்தது மனிதனுக்கு பல்வேறு விதங்களில் உள்ள டென்ஷங்களை வகைப் படுத்துகின்றார்.
உடல்,மனம்,வாழ்க்கை என்ற தலைப்பில் இவை மூன்றும் ஒரு மனிதனுக்கு எவ்வளவு முக்கியம் என உணர்த்துகிறார்.இவற்றைக் கூறும் போது டென்ஷனைக் குறைப்பதைப் பற்றி பார்ப்பதற்க்கு முன்பு கெலன்கெல்லரை மனதில் நினைக்கச் சொல்கின்றார்.அவர் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கச் சொல்லுகின்றார்.
                                            ஓடம் கவிழ்த்த பிரம்மச்சாரி கதையைக் கூறுகின்றார்.தனிமையைப் பற்றிக் கூறும் போது மனிதன் நொண்டியாக இருக்கலாம்.ஆனால் ஒண்டியாக இருக்கக் கூடாது எனக் கூறுகிறார்.ஹிட்லர்,முசோலினி,இடியமின் பற்றி கூறும் போது தனிமையே அவர்களை அவ்வாறு ஆக்கியது என்கிறார்.எல்லோரிடமும் நட்பு பாரட்டக் கூறுகின்றார்.ஆப்ரகாம் லிங்கன் தாடி வைத்த கதையைக் கூறி இவ்வாறு நாம் பெரியவர் சிறியவர் என்று பார்க்காமல் பழகும் போது ஒவ்வொருவரிடமும் இருந்து ஒரு யோசனை கிடைக்கும் அதில் ஏதாவது ஒரு யோசனை கிளிக் ஆகும் எனக் கூறுகிறார்.தனியாக தனக்குள் நினைத்து புலம்பிக் கொண்டிருப்பதைக் காட்டிலும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளச் சொல்லுகின்றார்.
                                           நல்லதொரு குடும்பம் என்னும் தலைப்பில் குடும்பப் பிரச்சனைகள் அனைத்திற்கும் உதாரணங்களுடன் தீர்வு கூறியிருக்கின்றார்.
                                         சிரித்தாலும் போதும் தெய்வங்கள் தோன்றும்,எதிர் கொள்ளுங்கள் என்ற தலைப்பில் எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் அதற்குத் தக்க பதிலளிக்கும் உத்திக் கற்றுக் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.கிரிமால்டி,சார்லி சாப்ளின் போன்றோர் தாங்கள் மகிழ்ச்சியுடன் இல்லாவிட்டாலும் மற்றவர்களை எவ்வாறு மகிழ்வித்தனர் என்று விளக்கியுள்ளார்.
                        இசை என்னும் இன்ப வெள்ளம் என்னும் தலைப்பில் இசையின் பெருமைகளை கூறியுள்ளார். இசையை அறியாத மனிதனை எளிதாக டென்ஷன் தாக்கும் என்கிறார்.மேலும் தனிமையைத் தவிர்ப்பது டென்ஷனுக்கு எதிராக தரைப்படை தாக்குதலைப் போன்றது என்றால் வான்வெளி தாக்குதல் போன்றது இசை என்கிறார்.
                   தற்கொலை என்னும் தத்துவம் என்னும் தலைப்பில் குடும்பப் பிரச்சனைகளால் ஏற்படும் டென்ஷன் குறித்தும் ,பெரும்பாலும் தற்கொலை செய்து கொள்ளும் வயதினர் குறித்தும் கூறியுள்ளார்.
                    என்ன சொல்கிறது விஞ்ஞானம் என்னும் தலைப்பில் சின்ன சின்ன விஷயங்களில் பெரிய வெற்றி ஒளிந்திருப்பதைக் கூறியுள்ளார்.வாழ்க்கையில் முழுக்க நேர் அணுகுமுறை இருந்தால் நல்லது தான் ஆனால் அது நிறைவேறாவிட்டால் மிகுந்த ஏமாற்றத்திற்கு ஆளாவார்கள் அதனால் வாழ்க்கையில் ஒரு செயலை செய்வதற்கு முன் குறைவான அளவில் எதிர் அணுகுமுறையும் தேவை என்கிறார்.
                 கடைசியில் தியானம் பற்றி கூறுகிறார்.உள்ளது ஒரே வாழ்வு என்னும் தலைப்பின் கீழ் பார் என்னும் தத்துவம் படி தன்னையே தான் ஒரு மூன்றாவது மனிதனாக பாவித்து தன்னிடம் உள்ள குறைகளை ஒவ்வொன்றாக களையச் சொல்லுகின்றார்.

 மதுரை மாவட்ட மைய நூலகத்திற்கு நன்றி                    

புத்தகத்தின் ஆசிரியர் கார்த்தீபனுக்கு நன்றி  


8 comments:

  1. நல்ல விமர்சனம்...பகிர்வுக்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கு நன்றி ஐயா

      Delete
  2. ஒரு மனிதனை செழுமைப்படுத்துவது நல்ல நூல்களே!. அதனால் வாசிப்பதும் , அவற்றைப் பகிர்ந்துகொள்வதும் மிக நல்ல பண்பு. அத்தோடு நாம் கற்ற நல்ல விசயங்களை கடைபிடிப்பதும் அவசியமானது. உங்களது முயற்சி மற்றவர்களுக்கு பயன்படட்டும். வாழ்த்துக்கள் இளைஞனே !
    --சு.கருப்பையா.

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கு நன்றி ஐயா

      Delete
  3. சிறந்த நூல் அறிமுகம்
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கு நன்றி ஐயா

      Delete
  4. //மன இறுக்கத்தை பற்றிய நூல் என்றாலே யோகாசனம்,தியானம் முக்கால் பங்கு இடம் பெற்று விடும் நிலையில் இந்த நூல் சற்று வித்தியாசமானது .எடுத்தவுடன் நெருப்பில் வெந்து சாவதை விட மன நெருக்கடியில் வெந்து சாவது கொடியது என ஆரம்பிக்கின்றது .//....என ஆரம்பிக்கின்றது உங்கள் நூல் அறிமுகம்..புத்தகத்தை படித்துவிட வேண்டும் எனும் ஆவலைத் தூண்டும் வண்ணம் இருக்கிறது..நன்று..

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கு நன்றி ஐயா

      Delete

கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன

தொடர்புடைய பதிவுகள்

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out